வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் சொந்த நூலகங்களுக்கு விருது
சட்டமன்ற பேரவையில் 2024-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்கவேண்டும்” என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து “சொந்த நூலகங்களுக்கு விருது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
மேற்கண்ட அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நூலகங்களின் விவரங்களை நூல்களின் எண்ணிக்கை, எந்த வகையான நூல்கள், தங்களிடமுள்ள அரியவகை நூல்கள், நூலகம் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், நூலகத்தின் புகைப்படம் போன்றவற்றை 9442060835, 9894923725 என்ற அலைபேசி எண்களிலும், dloviruthunagar@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம்.
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தனிநபருக்கு ”சொந்த நூலகங்களுக்கு விருது” விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது புத்தக கண்காட்சியில் வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் இல்லங்கள் தோறும் நூலகங்கள் அமைத்து வாசிப்பு பழக்கத்தை விரிவுபடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0
Leave a Reply