25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


பாலின் டி ஆர் விருது: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விருதை வென்று இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாலின் டி ஆர் விருது: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விருதை வென்று இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் சாதனை.

கால்பந்தில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் 1956 முதல் 'பாலன் டி ஆர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. பிபா தரவரிசையில் 'டாப்-100' பட்டியலில் உள்ள நாடுகளின் பத்திரிகையாளர்கள் ஓட்டளித்து இவர்களைத் தேர்வு செய்வர். அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (8 முறை), போர்ச்சுகலின் ரொனால்டோ (5 முறை) அதிக முறை இவ்விருதை வென்றுள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான 'டாப்-10' விருதுப் பட்டியலில் மெஸ்ஸி, எம்பாப்பே உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த நிலையில், சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி கேன் (33) தேர்வு செய்யப்பட்டார். கிளப் அரங்கில் ஜெர்மனியின் பேயர்ன் முனிக் அணிக்காக விளையாடும் ஹாரி கேன், நடப்பு சீசனில் இங்கிலாந்து மற்றும் கிளப் அணிகளுக்காக களமிறங்கிய 65 போட்டிகளில் 73 கோல்களை அடித்துள்ளார்.

குறிப்பாக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விருதை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2001ஆம் ஆண்டில் மைக்கேல் ஓவன் இவ்விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News