25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழங்குடியின முகாம்களில் வாழும் 71 பழங்குடியினர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆதார் அட்டைகள் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழங்குடியின முகாம்களில் வாழும் 71 பழங்குடியினர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆதார் அட்டைகள் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  (09.08.2025) மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடி இன முகாம்களில் வாழும் 61 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களையும், 3 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 7 நபர்களுக்கு ஆதார் அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு வட்டத்தில் ராம் நகர், ஜெயந்தி நகர், அத்திக்கோவில் ஆகிய 3 முகாம்களிலும், இராஜபாளையத்தில் அய்யனார் கோவிலில் 1 முகாமிலும் என மொத்தம் 4 முகாமில் ஏறத்தாழ 200-ற்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட போது,
ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள் வேண்டி கோரிக்கைகளை வைத்தனர்.அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடர்புடைய கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவிட்டிருந்தார்.அந்த வகையில், பெரும்பாலும் முன்பு மலைவாழ் மக்களின் பிறப்பு வீட்டிலேயே நடந்ததாலும், மருத்துவமனையில் ஏற்படும் குழந்தை பிறப்புகளுக்கு அவர்களின் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பிறப்புச்  சான்றிதழ்களை பெறாமல் இருந்ததையும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை பெற   இருந்த நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதனை சரி செய்து பழங்குடியின மக்களுக்கு வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  

அதன்பேரில், உரிய அரசு அலுவலர்கள் உடனடியாக பரிசீலனை செய்து, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எல்லாம் களைந்து, அவர்களுக்கு 15 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இதுவரை பிறப்புச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாமல் இருந்த சுமார் 16 முதல்  70 வயதுள்ள முதியவர்களுக்கு கூட இதன் மூலம் பிறப்புச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளது.இதற்காக மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர், சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி,   வட்டாட்சியர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News