பிஸ்கட் அல்வா.
தேவையான பொருட்கள் :
பிஸ்கட் பாக்கெட் - 2
பால் - 1/2 லிட்டர்
நெய் - 150 கிராம்
முந்திரி - 100 கிராம்
செய்முறை :
முதலில் மில்க் பிஸ்கட்களை வாங்கி அதனை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாறும் வரை காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுத்தாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து உருகிய பின்னர் பொடித்து வைத்துள்ள முந்திரியை சேர்க்க வேண்டும்.
முந்திரி நன்கு சிவந்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது கடாயில் இருக்கும் நெய்யினை சிறிது எடுத்து தனியாகஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இருக்கும் நெய்யில் உடைத்து வைத்துள்ள பிஸ்கட் பீஸ்களை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பிஸ்கட் வதங்கிய பின் அதில் காய்த்து வைத்துள்ள பாலை ஊற்ற வேண்டும். பால் ஊற்றிய பிறகு, கடாயில் இருக்கும் கலவையை கைவிடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். கட்டிகள் தட்டாதவாறு கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.கலவை அல்வா பதத்தில் வந்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதான் நெய்யின் கமகம மணத்தில் பிஸ்கட் அல்வா ரெடி!
0
Leave a Reply