பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ,உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
மன்னர் மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாடுகளில் தலைவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது, அவர்களுடைய மரணம் குறித்து ஊடகங்கள் எதுவும் பேசுவதில்லை.
ஆனால், மேலை நாடுகளில் அப்படியல்ல. திடீரென நாட்டின் தலைவர் மரணமடைந்தால், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்து வெளிப்படையாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
அவ்வகையில், தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கு குறித்து அவரது உதவியாளர்கள் திட்டமிட்டுவருகிறார்கள். அந்த திட்டத்துக்கு, Operation Menai Bridge என பெயரிடப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
. எல்லோரும் நல்லதே நடக்கும் என்ற எண்ணங்களுடன்தான் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில், மன்னர் உடல் நிலை மோசமாக உள்ளது என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.புற்றுநோய் பாதிக்கப்பட்டபின்பும் தொடர்ந்து புன்னகையுடன் மக்களிடம் முகம் காட்டினாலும், உண்மையில், மன்னர் சார்லசின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply