25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக ,வனப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகளில் வனவிலங்கு வேட்டையை கட்டுப்படுத்த சோதனை சாவடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக ,வனப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகளில் வனவிலங்கு வேட்டையை கட்டுப்படுத்த சோதனை சாவடி.

ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக வனச் சரணால்யப் பகுதியில் நீரோடைகள் மற்றும் காப்புக்காடுகள் அதிகம் உள்ளன். யானைகள், இதனால் மிளா, மான்கள், காட்டுப் பன்றி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பல்வேறு பறவை இனங்கள் உட்பட பல வகையான வன உயிரினங்கள் வாழ்விடமாக திகழ்கிறது.

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மலைப்பகுதியில் இருந்த நீராதாரங்கள் வற்றி வருகின்றன. இதை அடுத்து தண்ணீர் மற்றும் உணவை தேடி காட்டு மாடுகள், மான்கள், காட்டுப்பன்றிகள் மலையை ஓட்டி உள்ள விளை நில பகுதியை நோக்கி நகர்கின்றன. இதை எதிர்பார்த்து வனவிலங்குகள் வேட்டை யில் ஈடுபடும் சமூக விரோதிகள் பட்டா நிலங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் போர்வையில் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். இவர்களின் போக்கு வன உட்பகுதி வரை வேட்டைக்கான விலங்குகளை தேடி செல்லும் நிலை உள்ளது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் பறந்து விரிந்துள்ள வனப்பகுதியில் சில நூறு வனக்காவலர்கள் மூலம் கண்காணித்து கட்டுப்படுத்தும் செயல் முழுமை அடையவில்லை. வனப்பகுதிக்கு உள்ளே செல்லும் பாதைகளான ராஜபாளையம் அய்யனார் கோயில், ராக்காச்சி அம் மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.செண்பகத் தோப்பு ரோடு, மாவூத்து பாதை, அத்திக்கோயில், வக்கல் நீர்தேக்க பாதை, தேவதானம் அசையாமணி விலக்கு உள்ளிட்ட வனப்பகுதிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போலீஸ் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பதன் மூலம் பெருகிவரும் வன விலங்கு வேட்டைகளை தடுத்து  கட்டுப்படுத்த முடியும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *