வெடி விபத்தில்உயிரிழந்தவர்களின் 6 குடும்பங்களுக்கு மற்றும் காயமடைந்தவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.01.2025) விருதுநகர் வட்டம், கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் 04.01.2025 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் 6 நபர்களுக்கு மொத்தம் ரூ.24 இலட்சம் மற்றும் விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.1 இலட்சம் என மொத்தம் ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் வட்டம், கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில்; 04.01.2025 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 இலட்சம் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 இலட்சமும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த திரு.மீனாட்சி சுந்தரம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி மரகதவள்ளி என்பவருக்கும், குருத்தமடத்தை சேர்ந்த திரு.வேல்முருகன் என்பவரது வாரிசுதாரரான (மனைவி) திருமதி கிருஷ்ணவேணி என்பவருக்கும், செட்டிக்குறிச்சியை சேர்ந்த திரு.நாகராஜ் என்பவரது வாரிசுதாரரான (மனைவி) திருமதி சித்ராதேவி என்பவருக்கும், வீரார்பட்டியை சேர்ந்த திரு.கண்ணன் என்பவரது வாரிசுதாரரான (மனைவி) திருமதி ராஜேஸ்வரி என்பவருக்கும், குருத்தமடத்தை சேர்ந்த திரு.காமராஜ் என்பவரது வாரிசுதாரரான (மகன்கள் மற்றும் மகள்) திரு.அருண்குமார், செல்வன்.கனிஷ், செல்வி.வர்ஷா என்பவர்களுக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த திரு.சிவகுமார் என்பவரது வாரிசுதாரரான (மனைவி) திருமதி மீனாட்சி என்பவருக்கும், என உயிரிழந்த 6 நபர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.24 இலட்சம் மற்றும் வெடிவிபத்தில் காயமடைந்த ஆவுடையாபுரத்தை சேர்ந்த திரு.முகமதுசுதீன் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் என மொத்தம் ரூ.25 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply