25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிளாஸ்கோவில் நாளை காமன்வெல்த் போட்டிகள் துவக்கம்: இந்திய வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிளாஸ்கோவில் நாளை காமன்வெல்த் போட்டிகள் துவக்கம்: இந்திய வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகின்றன. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பதக்க வேட்டைக்குத் தயாராகியுள்ளனர்.

ஒலிம்பிக் தங்க நாயகன் நீரஜ் சோப்ரா, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், முத்தாண்டுத் தாண்டுதல் வீரர் பிரவீன் சித்ரவேல் உள்ளிட்ட பலர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக களமிறங்க உள்ளனர்.

10 விளையாட்டுகள் மட்டுமே--

இந்த முறை காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 10 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. தடகளம், நீச்சல், டிராக் சைக்கிளிங், பளுதூக்குதல், 3×3 கூடைப்பந்து, லான் பவுல்ஸ், நெட்பால், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ மற்றும் குத்துச்சண்டை ஆகியவை நடத்தப்படுகின்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பிரிவில் 6 போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில், பேட்மிண்டன், ஹாக்கி, கிரிக்கெட், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டிரையாத்லான், மல்யுத்தம், பீச் வாலிபால் மற்றும் ரக்பி செவன்ஸ் உள்ளிட்ட 9 விளையாட்டுகள் இந்த முறை சேர்க்கப்படவில்லை.

போட்டிகள் கிளாஸ்கோவில் உள்ள நான்கு அரங்குகளில் நடைபெறவுள்ளன. வழக்கம்போல் தனி விளையாட்டு கிராமம் அமைக்கப்படாமல், வீரர்-வீராங்கனைகள் நகரின் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

துவக்க விழாவில் இந்தியக் கொடி.

ஜூலை 23-ம் தேதி OVO Hydro Arena-வில் நடைபெறும் தொடக்க விழாவில், இந்திய அணியின் சார்பில் ஒலிம்பிக் பதக்க நாயகிகள் மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி இந்த தொடரில் அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News