இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (17.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, இராஜபாளை ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.22.50 இலட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான மயானம் கட்டடம், தகன கொட்டகை, காத்திருப்புக் கூடம், சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும்,அதனை தொடர்ந்து, மேலப்பாட்டகரிசல்குளம் கிராமத்தில் திருவள்ளுவர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதையும்,மேலப்பாட்டகரிசல் குளம் கிராமத்தில் ரூ.3.95 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும்,மேலும், நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.3இலட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்த கூடம் அமைக்கப்பட்டு வருவதையும்,நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.31.46 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சோழபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சுமார் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் ஜமீன் கொல்லன் கொண்டான் கிராமத்தில் உள்ள ஜமீன் அரண்மனைக்குச் சென்று அரண்மனையின் கட்டிட வடிவமைப்பு குறித்துப் பார்வையிட்டு, ஜமீன்தாரின் வாரிசுதாரர்களிடம் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து ஜமீன் கொல்லன் கொண்டான் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் அரசன் அல்லது தலைவன் அரியாசனத்தில் ஆடை ஆபரணங்களுடன் அமர்ந்திருந்ததை வெளிப்படுத்தும் விதமாக உள்ள சுமார் 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல் சிற்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
0
Leave a Reply