25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் -2024 மற்றும் வைட்டமின் - A சிரப் வழங்கும் முகாமில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் பொடி மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் -2024 மற்றும் வைட்டமின் - A சிரப் வழங்கும் முகாமில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் பொடி மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணி

விருதுநகர் சூலக்கரை அங்கன்வாடி மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற, வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் -2024 மற்றும் வைட்டமின் -A வழங்கும் முகாமில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் பொடி மற்றும் வைட்டமின் - யு சிரப், துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்(01.07.2024) தொடங்கி வைத்தார்.

மேலும், ஓ.ஆர்.எஸ் கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் துத்தநாக மாத்திரை உட்கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.மாவட்டத்தில் வயிற்று போக்கினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பை தடுக்க, வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஜூலை 1 முதல் ஆக., 31 வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில், 6-க்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் வழங்கப்படும். மேலும் தாய்ப்பாலின் மேன்மை, ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயாரிக்கும் முறை, துத்தநாக மாத்திரை வழங்கும் முறை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும்.இம்முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக 6 வயதிற்குட்பட்ட 1,28,267 குழந்தைகள் பயனடைய உள்ளார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) திருமதி தனலெட்சுமி உட்பட அரசுஅலுவலர்கள், தாய்மார்கள், குழந்தைகள், அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News