25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளில் வீடு பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளில் வீடு பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய 200 மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வீடு வழங்கிட தகுதியான நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழ்கண்ட  நிபந்தனைகளுடன் விண்ணப்பம் சொந்த வீடு, நிலம் , காலியிடம் இருக்ககூடாது, வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க  வேண்டும், விண்ணப்பித்தவர்களில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்தளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இராஜபாளையம் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்கள்;, கண்டிப்பாக புது இருப்பிடத்திற்கு குடிபெயர வேண்டும். குடியிருப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.89,000 பணம் செலுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும், விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் கிடைக்கப்பெற கடைசி நாள்: 31.07.2024. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2, வருமான சான்றிதழ்) மேலும் விவரம் பெறுவதற்கு  மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068 -யை தொடர்புக்கொண்டு பயனடையுமாறும், மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News