இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய விழா
இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு இடையிலான ஆங்கில இலக்கிய விழா நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் மருதநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் மற்றும் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் சூர்யகலா வாழ்த்துரை வழங்கினார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் சான்றிதழையும் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வழங்கினார். நன்றியுரையை பேராசிரியர் பாண்டிபிரியா வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
0
Leave a Reply