வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், மழைக்காலங்களில் செடிகள் நன்கு செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்க….
மழைநீர் மரம், செடி, கொடிகளுக்கு மிகவும் அவசியம் என்றாலும் அந்த மழைநீர், தேவைக்கு அதிகமான அளவு மரங்களின் வேர் பகுதிகளில் தேங்கி நிற்கும் அளவிக்கிற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்து விடக் கூடாது. ஏனெனில் மழை பொழியும் சமயங்களில், அந்த மரத்திற்கு அடியில் இருக்கின்ற மண்ணின் அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் மழைநீர் அடித்துக் கொண்டு சென்றுவிடும். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே உங்கள் தோட்டங்களில் இருந்து மழைநீர் முழுவதும் வெளியேறும் வகையில் வடிகால் அமைப்பை ஏற்படுத்தி வைக்க வேண்டும்.
ஒரு சில வகை மரம், செடி கொடிகளில் கிளைகள் மிக அதிக அளவில் வளர்ந்து புதர் போன்று காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் செடிகளின் வளர்ச்சி அதி வேகமாக இருக்கும். எனவே மழைக் காலங்களுக்கு முன்பாகவும், மழைக்காலங்களின் பொழுதும் உங்கள் தோட்டங்களில் இருக்கின்ற செடி, கொடிகளில் உங்களுக்கு தேவையில்லை என்றும் நீங்கள் கருதுகின்ற மரம், செடிகளின் கிளைகளை வெட்டி விட வேண்டும். இது ஊட்டம் நிறைந்த புதிதான கிளைகள் நன்கு வளர்வதற்கு உதவி புரியும்.
மனிதன் முதன் முதலில் விவசாயம் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனது விவசாய தொழிலுக்கு மிகவும் உற்ற நண்பனாக இருந்து வருவது மண்ணிற்கு அடியில் வாழும் உயிரினமான மண்புழு ஆகும். மழைக்காலங்களில் செடிகள் வளருகின்ற மண் பரப்பு சுலபத்தில் தளர்ந்து விடுவதால், மண்புழுக்கள் மண்ணிற்குள்ளாக ஆழமாக ஊடுருவிச் சென்று, செடிகள் வளருகின்ற அந்த மண்பகுதியை, செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் நிறைந்ததாக மாற்றுகிறது. மண்புழுக்கள் அதிகம் இல்லாத மண்ணாக இருந்தாலும், மண்புழு கொண்டு செய்யப்பட்ட மண்புழு உரங்களை செடிகளின் வேர்ப் பகுதிகளில் இடுவதால் செடிகள் இந்த மழைக் காலங்களில் மிக சீரான வளர்ச்சியை அடைவதற்கு ஏதுவாக இருக்கும்.
களைச்செடிகள் மழைக்காலத்தில் அதிகமாக வரக்கூடியதாகும். எனவே தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் , ஆரோக்கியமாக வளர்வதற்கு இத்தகைய களைச்செடிகளை மழைக்காலத்திற்கு முன்பாக வேருடன் பிடுங்கி அவற்றை அப்புறப்படுத்துவது நல்லது. இந்த களை செடிகள் உங்கள் செடிகளுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி எடுத்துக்கொண்டு உங்கள் செடிகளுக்கு கிடைக்கவேண்டிய சத்துக்களை கிடைக்கவிடாமல் செய்துவிடும்.
எந்த ஒரு வகை செடி, கொடி வளர்வதற்கும் சூரிய வெளிச்சம் இன்றியமையாததாகிறது. மழைக்காலங்களில் இத்தகைய சூரிய வெளிச்சம் அதிக அளவில் கிடைக்காத நிலை ஏற்படும். தங்களின் வீடுகளுக்கு உள்ளே உள்ள தொட்டிகளில் அலங்கார மற்றும் இதர வகையான செடிகளை வளர்ப்பவர்கள் சூரிய ஒளி கிடைக்காத பட்சத்தில், செயற்கையான மின்சார விளக்கு வெளிச்சத்திற்கு கீழாக அந்த செடிகள் சில மணி நேரமாவது இருக்குமாறு செய்ய வேண்டும். தொட்டிகளில் வளருகின்ற செடிகள் செயற்கையான மின்விளக்கிலிருந்து தேவையான சத்துக்களை பெற்று கொள்ளும் திறனை கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டு தோட்டங்களில் வளருகின்ற செடிகளுக்கு அருகிலோ அல்லது மாடி தோட்டங்களில் தொட்டிகளில் வளர்க்கப்படுகின்ற செடிகளுக்கு அருகிலோ மழை பெய்து முடிந்ததும், அந்த மழை நீர் தேங்காமல் விரைவில் அப்புறப்படுத்தி விட வேண்டும். ஏனெனில் இத்தகைய நீரில் பல வகையான பாசிகள் படர்ந்து வளர வாய்ப்புகள் அதிகம். பாசிகள் செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒன்றாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே பாசிகள் படியாத வண்ணம் பார்த்து கொள்வது செடிகளுக்கு நாம் வளர்க்கும் நன்மைகளை உண்டாகும்.
0
Leave a Reply