என்ன நன்மைக்கு தீபாவளி, வெடி வெடிக்கிறோம்
ஹிந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது அவசியமானது,தீபாவளி என்றாலே பெரியவர்களுக்கு புது துணி போடப் போகிறோம் என்ற சந்தோஷம், குட்டீஸ்கள் வெடி வெடிப்பதில் சந்தோஷம். இந்த தீபாவளி, ஏழைகளின் எட்டாக்கனியான போதிலும், எந்த ஏழையும் தீபாவளியை புறக்கணிப்பதில்லை, அவர்களால் முடிந்த பட்ஜெட்டிற்கு துணிமணிகள், பட்டாசுகள், பலகார பண்டங்கள் வாங்கி மகிழ்ந்து கொண்டாடுகின்றனர். அதிகாலை எண்ணெய் வாசனையும், சாம்பிராணி, ஊதுபத்தி வாசனையும், இனிப்பு பலகாரங்களின் வாசனையும், புதுத்துணியின் வாசனையும், என, அனைத்தும், மகிழ்ச்சி தான்.
பட்டாசுகளின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது. ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது. மலைபோல் குவியும் குப்பையால் சுற்றுச்சூழல் கேடு, தூய்மைப் பணியாளர்களுக்கு பணிச்சுமை, தீ விபத்துகள், உயிரிழப்புகள், காயங்கள் ஏற்படும் என்றெல்லாம் எழுதியிருந்தார். உண்மைதான்.
பட்டாசிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மை மிகுந்த புகை எத்தனை நோய்களை உருவாக்கும் என்ற விழிப்புணர்வை நம் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவோம். என்ன தான் பசுமைப் பட்டாசு என்றாலும் அதிலிருந்து வரும் புகை சாதா பட்டாசை விட 50 சதவிகிதம் நச்சுப் புகையை வெளியேற்றும்,
இதிலிருந்து வரும் நச்சுப்புகை ஆஸ்துமா, மூச்சிரைபப்பு, உள்ளவர்களுக்கு அதிகமாகி மூச்சுக்குழல், நுரையீரல் அரிப்பு எரிச்சல் போன்ற இன்பெக்ஸன் ஏற்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் சப்தம் முதியோர்கள், குழந்தைகளை பாதித்து உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு இன்னும் பாதிக்கும் மிருகங்கள், பறவைகள் பதற்றத்தில் இருக்கும். சில சமயம் நாய், பூனை, பறவை அதற்கு காது கேட்கும் திறனும் போய்விடும். இப்படிப்பட்ட வெடியைப் போட்டு சந்தோஷப் பட என்ன இருக்கிறது.தீபம் ஏற்றி கொண்டாடலாமே ! வெடி வேண்டாமே !
0
Leave a Reply