விளையாட்டு போட்டிகள் MARCH 7TH
குத்துச்சண்டை
கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,)மார்ச் 21-27ல் தேசிய சாம்பியன்ஷிப் , 'நடப்பு சாம்பியன்' ரயில்வேஸ் உட்பட 300க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
செஸ்
செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ்கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.இதன் 7வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, சீனாவின் யி வெய் மோதி, 61வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். அரவிந்த், 39வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஏழு சுற்றுகளின் முடிவில் தமிழகத்தின் அரவிந்த், 5.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
பாட்மின்டன்
பிரான்சில் சர்வதேச பாட்மின்டன் தொடர் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 19 இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி (48வது இடம்), முன்னாள் உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-12' ஆக உள்ள, சிங்கப்பூரின் லோகியான் இயுவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய ஆயுஷ், அடுத்த செட்டை 21-9 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் ஆயுஷ் 21-17, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றில் ஆயுஷ் ஷெட்டி, 21–17, 21-17 என ஹாங்காங்கின் குனவானை வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்னிஸ்
செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மரியா கார்லியை அமெரிக்காவில் நடக்கும் இந்தியன் வெல்ஸ் ஓபன் முதல்சுற்றில் வீழ்த்தினார்.
கிரிக்கெட்
இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள்இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஏப். 27- மே 11, இடம்: கொழும்பு) பங்கேற்கின்றன.
0
Leave a Reply