பூண்டுசுவாசத்தை சீராக்க உதவுகிறது
பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருள். இது பல உடல் நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மட்டுமல்லாமல், ஒப்பனை நோக்கங்களுக்காகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
பூண்டு பழங்காலத்தில் தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இன்னும் சிலர் அதே நடைமுறையை பின்பற்றுகிறார்கள். பூண்டு தலையணையின் கீழ் வைக்கப்படுகிறது..
பூண்டின் சக்திவாய்ந்த நறுமணம் நாசிப் பாதைகளை சுத்தமாக்கி சுவாசத்தை சீராக்க உதவுகிறது. உங்களுக்கு ஜலதோஷம் இருந்தால் இரவில் சரியாக தூங்குவதிலும் சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்படலாம். அப்படி நீங்க அவதிப்படும் போது ஒரு பல் பூண்டை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இதனால், பூண்டில் உள்ள அல்லிசின், உடலைத் தாக்கும் நுண்ணுயிரிகளைத் தடுக்க உதவுகிறது. படுக்கைக்கு முன் சிறிது பூண்டு சாப்பிட முயற்சிக்க வேண்டும்.
பூண்டில் மெக்னீசியம்மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு கனிமங்கள் உள்ளன.மனிதர்களின் தரமான தூக்கத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மெக்னீசியம் ஆரோக்கியமான நிலைகளை பராமரிப்பதன் மூலம் உடல் நல்ல, ஆழ்ந்த, அமைதியான தூக்கத்தை அடைய உதவுகிறது. உடலைத் தளர்த்துகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பொட்டாசியம் தூக்க திறனை அதிகரிக்கிறது. இந்த இரண்டு சத்துக்களும் தினமும் போதுமான அளவு கிடைத்தால், படுக்கைக்கு அடியில் பூண்டுபற்களை வைக்க வேண்டிய அவசியமில்லை.
பூண்டு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அடிக்கடி கிருமிகள் வராமல் தடுக்கிறது. உங்கள் உணவில் பூண்டு பற்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் விரைவில் நிவாரணம் பெறலாம். ஏனெனில் பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை தடுக்கிறது. தினமும் இரவில் தலையணைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். சளி பிடித்தால், உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவில் உறங்கும் போது சிறிய பூச்சிகள் மற்றும் கொசுக்களால் நீங்கள் தொந்தரவு செய்தால் உங்கள் தலையணையின் கீழ் ஒரு பல் பூண்டு வைக்க வேண்டும். பூண்டு பூச்சிகளுக்கு விஷம். பூச்சிகள் வராமல் இருக்கும். சிலர் பூண்டுப் பற்களை அரைத்து தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரை பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தெளிப்பார்கள். ஏனெனில் பூச்சிகளுக்கு பூண்டின் வாசனை பிடிக்காது.
தூக்கமின்மைக்கான மற்றொரு எளிய பூண்டு மருந்து பூண்டு பால் செய்து குடிப்பது. இந்த பாலை தயார் செய்ய,1 கப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் சில பல் பூண்டு சேர்த்து,3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.மன அமைதிக்கு பூண்டு மிகவும் உதவும்.
0
Leave a Reply