ஜெர்மன் சூப்பர் கோப்பை கால்பந்து தொட ரில் பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
ஜெர்மன் சூப்பர் கோப்பை கால் பந்து 16வது சீசனுக்கான பைனல் ஜெர்மனியின் ஸ்டட் கர்ட் நகரில் நடந்தது. இதில் ஸ்டட்கர்ட், பேயர்ன் முனிக் அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிக் அணிக்கு 18வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். பேயர்ன் முனிக் அணிக்கு 77வது நிமிடத்தில் லுாயிஸ் டியாஸ் ஒரு கோல் அடித்தார். ஸ்டட் கர்ட் அணிக்கு 'ஸ்டாப் பேஜ்' நேரத்தில் (90+3வது நிமிடம்) ஜேமி லெவெ லிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிக் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக கோப்பை வென்றது.
0
Leave a Reply