ஆயுர்வேதத்தில் கோவக்காய் புற்றுநோய் செல்களுக்கு மருந்து!
கோவக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அதிகளவு பீட்டா கரோட்டின் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் டியூமர் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. இது புற்றுநோய் செல்கள் பல்கிப்பெருகுவதை நிறுத்த உதவுகிறது. உங்கள் உணவில் கோவக்காய் சேர்த்துக்கொள்ளும்போது, அது புற்றுநோய் வாய்ப்புக்களை தடுக்கிறது.
கோவக்காய் நிறைய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பல்வேறு நோய்களையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸை கொல்கிறது. இது காய்ச்சல், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, தொழுநோய் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது. இதற்கு சரியான உணவை எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயையும் சில வாரங்கள் சேர்த்துக்கொண்டு பலன்பெறுங்கள்.
கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
0
Leave a Reply