ராஜபாளையத்தில் தெருவெங்கும் ஓடும் கழிவுநீர்: தொற்றுநோய் அச்சத்தில் பொதுமக்கள் .
ராஜபாளையம் நகராட்சியின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் இருந்து கழிவுநீர் தொடர்ச்சியாக வெளியேறி சாலையில் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக ஐ.என்.டி.யு.சி நகர் குடியிருப்புப் பகுதி, மலையடிப்பட்டி ரயில்வே கேட் அருகில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பச்சை மடம் செல்லும் சாலை மற்றும் போஸ் பார்க் பக்கவாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட இடங்ளில் மேன்ஹோல்கள் நிரம்பி கழிவுநீர் வீதிகளில் வழிந்தோடுவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகளும், வழியில் செல்லும் வாகன ஓட்டிகளும் తీవ్ర சுகாதாரச் சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பிரச்சினையை உடனடியாகச் சரிசெய்து நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
Leave a Reply