ராணி முகர்ஜிக்கு கவுரவ டாக்டர் பட்டம்.
90 மற்றும் 2000-களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல லா ட்ரோப் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
2019-ல் நடிகர் ஷாருக்கானுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது இந்திய நடிகர் என்ற பெருமையை ராணி முகர்ஜி பெற்றுள்ளார். இந்தியத் திரையுலகில் 30 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பங்களிப்பு, சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகளைப் பாராட்டும் விதமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply