அண்டை வீட்டின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் CCTV கேமரா பொருத்தக் கூடாது.
வீட்டின் பாதுகாப்பிற்காகCCTV கேமராக்களைப் பொருத்துவது ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைதான். ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தி அண்டை வீட்டில் வசிப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கண்காணிக்க யாருக்கும் உரிமையில்லை.
குறிப்பாக, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் செல்வதையும், வெளியே வருவதையும் கண்காணிக்கும் வகையிலோ, அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைப் பதிவு செய்யும் வகையிலோ CCTV கேமராக்களைப் பொருத்துவது அவர்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடும்.
எனவே, பாதுகாப்பு என்ற பெயரில் மற்றவர்களின் தனியுரிமைக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் பாதுகாப்பு முக்கியம்... அதேபோல் அடுத்தவரின் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.
0
Leave a Reply