பசியுடன் வரும் குழந்தைகளுக்கு அன்புடன் உணவளிக்கும் பள்ளிகள்.
குரோஷியாவில் மனிதநேயத்தைப் போற்றும் ஒரு அழகான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி நுழைவாயிலிலேயே பசியுடன் வரும் குழந்தைகளுக்காகப் பழங்களும் ரொட்டிகளும் வைக்கப்படுகின்றன.
உதவி கேட்கத் தயங்கும் குழந்தைகள்கூட எவ்விதத் தயக்கமுமின்றி தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளின் பசியைப் போக்குவதோடு, அவர்களின் சுயமரியாதையையும் காக்கும் இந்த உன்னதமான முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
பசியைப் போக்குவது மட்டுமல்ல... குழந்தைகளின் மனதையும் மதிப்பதே .
0
Leave a Reply