கிடை மாடுகள்
தமிழ்நாட்டில் நெல் முப்போகம் விளைந்த காலங்கள் உண்டு. அந்த காலகட்டத்தில் உரங்கள், பூச்சி மருந்துகள் எதுவும் இல்லை. விவசாயிகள் தங்கள் நிலத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளை கிடை அமர்த்தி, அந்த மாடுகள் இடும் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி நிலத்தை வளமாக்கி, இயற்கை முறையில் பயிர்களை விளைவித்தனர். பொதுவாக, வீட்டுக்கு வீடு மாடுகளை வளர்க்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. மாடுகளை வளர்க்கும் வீடுகளை தேடி கிடை மாடு மேய்ப்பவர் கள் வருவார்கள். அப்போது, பால் தரும் நாட்டு மாட்டு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, வீட்டில் இருக்கும் காளை மாடுகள் மற்றும் இளங்கன்றுகளை அவர்களிடம் மேய்ச்சலுக்கு கொடுத்து விடுவது வழக்கம்.
இந்த மாடுகளை பகல் முழுவதும் மேய விட்டு இரவு நேரத்தில் பயிர் விளையும் நிலத்தில் ஓய்வு எடுக்க விடுவார்கள். அந்த மாடுகள் கழிக்கும் சிறுநீர், சாணம் ஆகியவற்றால் வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைத்து விடும். இதனால் மண்ணின் தரம் உயருகிறது. அவர்கள் கிடைமாடுகளை அமர்த்தி உரம் இட்டதற்கு ஈடாக நிலத்தின் உரிமையாளர்கள் பணம் அல்லது நெல் கொடுப்பது உண்டு. நிலத்தில் ஒரு முறை கிடை போட்டால் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பயிர் செழித்து வளரும் என கூறுகின்றனர்.
0
Leave a Reply