25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சுகர்குறைய வெந்தயம்எந்த அளவுக்குதேவை?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுகர்குறைய வெந்தயம்எந்த அளவுக்குதேவை?

வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவு எடுத்துகொள்ள வேண்டும் இதில் கேலக்டோமான் என்ற கார்போஹைட்ரேட் வகை உள்ளது. செபோனின்ஸ் என்று சொல்லக்கூடிய சில முக்கியமான வேதியல் விஷயம் இருக்கிறது.4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் இந்த மூன்றும்தான் இதன் பயன்களுக்கு காரணம்.4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் என்பது இன்சிலினை உடல் எடுத்துகொள்ளாமல் இருக்கும் தன்மையை இது குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மெட்போர்மின் மாத்திரைகளுக்கு  நிகரானபயன்கள் வெந்தயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு நிகராக பயன்கள் பெற20 முதல்25 கிராம் வெந்தயத்தை நாம் எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த அளவிற்கு எடுத்துகொண்டால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.இதில் உள்ள கோலக்டோமான் பசியை கட்டுப்படுத்தும் திறமை கொண்டது. சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துகொண்டால் அதிகமாக சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் உடல் எடை குறையும். மெட்போர்மின் மருந்து என்பது ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிகமான சர்கக்ரை இருந்தால் அவர்களுக்கு இந்த மெட்போர்மின் மாத்திரைகள் வேலை செய்யாது.எச்பிஏ1சி  அளவு8 அல்லது9க்கு அதிகமாக உள்ளவர்களுக்கு வெந்தயம் பயன்தராது. ரொம்ப அதிக அளவு சர்க்கரை இருப்பவர்களுக்கு வெந்தயம் பயன்தராது.

அதிகம் உடல் பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு தசைகளில் இருக்கும் கிளைக்கோஜன் தீர்ந்துவிடும். இந்

நிலையில் இவர்கள் வெந்தயம் எடுத்துகொண்டால், இந்த கிளைக்கோஜன் தசைகளில் மீண்டும் உருவாகும் வேகத்தை இது அதிகரிக்கும். இதுபோல விளையாட்டு வீரர்கள்10 முதல்15 கிராம் வரை எடுத்துகொண்டால் நன்றாக அதிக நேரம் விளையாட முடியும்.கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புக்கு வெந்தயம் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் எலிகளுக்கு நடத்திய சோதனையில்தான் இது நிரூபனமாகியிருக்கிறது. மனிதர்களிடத்தில் இன்னும் ஆய்வு நடத்தப்படவில்லை. மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு வெந்தயம் சாப்பிடால் தீர்வாக இருக்கும். ஆண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைக்கும் இது தீர்வாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News