அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில்(SilliconValley) உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பு மட்டும் இன்றி அங்கே வேலை செய்து வருபவர்களிலும் பலர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்
அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவியில் இருப்பவர்கள் இந்தியர்கள்.கூகுளின் சுந்தர் பிச்சையில் தொடங்கி மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா, ஐபிஎம்மின் அரவிந்த் கிருஷ்ணா, ஸ்டார்பக்ஸின் லட்சுமண் நரசிம்மன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.அண்மையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சிலிக்கான் வேலியின் மத்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்பிர் கே பாட்டியா, அமெரிக்க தொழில்நுட்ப துறை என்பது இந்தியர்கள் இல்லாமல் செயல்படவே முடியாது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கமும் இந்தியர்களின் பங்களிப்பும் மிகப்பெரியது எனசுட்டிக்காட்டும் அவர், சிலிக்கான் வேலியில் பல்வேறு புதுமைகளுக்கு காரணமானவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர் என்றார். ஒரு காலகட்டத்தில் சிலிக்கான் வேலியில் உள்ள தலைமை செயல் நிர்வாக அதிகாரிகள் அல்லது நிறுவனர்களில்40% பேர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர், கூகுள், யூடியூப், கூகுள் பவுண்டேஷன், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்தியர்களே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார். இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் உற்பத்தி திறன் ஆகியவை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அவர்களை தலைமை பதவிக்கு கொண்டு சேர்க்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு பிரச்சனையை சமாளிப்பதற்காக இந்தியர்கள் கையாளும் வழிமுறைகள் குறிப்பாக எளிதில் தீர்வு காணும் குணம் ஆகியவை தலைமை பொறுப்புவரை அவர்களை கொண்டு சேர்க்கிறது என்றார். அண்மையில் கூட அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, பார்ச்சூன் 500 நிறுவனங்களின்10 தலைமை செயல் அதிகாரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் படித்த இந்தியர்களாக உள்ளனர்.
0
Leave a Reply