ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது.
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தேக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அய்யனார் கோவில் ஆற்று பகுதியில் லேசான மழை பெய்ததால் அந்த தண்ணீரை குடிநீர் தேக்கத்திற்கு நகராட்சி பணியாளர்கள் ஏற்றிபராமரித்து வருகின்றனர். தற்போது போதிய மழை இல்லாததால் குடிநீருக்கு தேவையான தண்ணீர் குறைந்து வருகிறது.
நீர்த்தேக்கத்தின் அளவு 22 அடியாகும். மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தற்போது 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில்தற்போது 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் குறைந்து வருகிறது.
0
Leave a Reply