25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ‘டிரா’.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ‘டிரா’.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா–சீனா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் சக வீராங்கனை நேஹா வழங்கிய ‘பாஸ்’ மூலம் இந்தியாவின் நவ்னீத் கவுர் கோல் அடித்தார். இதற்கு 15-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பை பயன்படுத்தி சீனாவின் ஜாங் யிங் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து 25-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் தீபிகா கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 39-வது நிமிடத்தில் சீனாவின் மா நிங் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News