மாமல்லபுரத்தில் சர்வதேச சர்பிங் லீக் நிறைவு.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச சர்பிங் லீக் போட்டி நிறைவடைந்தது. கடந்த ஆகஸ்ட் 12-ந்தேதி தொடங்கிய இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டியின் தொடக்கம் முதலே ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதிப்போட்டியில் புரோ ஆடவர் ஜூனியர் பிரிவில் ஜப்பானின் யூமா நாகசவா முதலிடம் பிடித்தார். புரோ ஜூனியர் பெண்கள் பிரிவில் ஹினாடா ஷிமிசு சாம்பியன் பட்டம் வென்றார்.
க்யூ.எஸ். ஆடவர் பிரிவில் இக்கோ வடனபேவும், க்யூ.எஸ். பெண்கள் பிரிவில் மிராய் இகேதாவும் முதலிடம் பிடித்தனர்.
ஒட்டுமொத்தமாக ஜப்பான் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
0
Leave a Reply