உலக செஸ் கோப்பை தொடரில், பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக் ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்ற உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் உலக செஸ் கோப்பை தொடர் நடந்தது. எட்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர்கள் நாடிர்பெக் (5.5), சிந்தரோவ் (5.0), பிரக் ஞானந்தா (4.5), அர்ஜுன் (45) முதல் 4 இடத்தில் இருந்தனர்.9வது, கடைசி சுற்றில் அர்ஜுன் அரவிந்த் மோதிய போட்டி 'டிரா' ஆனது. நாடிர்பெக்கிற்கு எதிரான போட்டியில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதன் 49 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17.10 லட்சம் பரிசு கிடைத்தது. அர்ஜுன் ரு. 6 லட்சம் (5வது), அரவிந்த் ரூ. 1.7 லட்சம் (10) பெற்றனர்.
0
Leave a Reply