விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 4066 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (Ballot Unit) வாக்குச் சீட்டு (Ballot Paper) ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (10.04.2024) மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். மக்களவை பொதுத்தேர்தல் 2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு 27 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளுக்கு மொத்தம் 4066 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit) அனுப்பி வைக்கப்பட்டது.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (Ballot Unit) வேட்பாளர் பெயர், சின்னம் மற்றும் புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.அதன்படி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 692 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 666 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு 616 வாக்குப்பதிவு இயந்திரங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 616 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,
195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு 730 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு 746 வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 4066 வாக்குப்பதிவு இயந்திரங்களில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வேட்பாளர் பெயர், சின்னம், பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 5 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களில் தலா 1000 வாக்குகள் வீதம் செலுத்தப்பட்டு மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply