பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 10/08/24
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 65 வீரர் 45 வீராங்கனை என மொத்தம் 110 பேர் 16 போட்டிகளில் களமிறங்கினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற நிலையில் இம்முறை இந்தியா எப்படியும் இரட்டை இலக்க பதக்கங்கள் பெறும் என நம்பப்பட்டது. மாறாக நாளை போட்டி முடியவுள்ள நிலையில் இந்தியாவுக்கு 5 பதக்கம் மட்டுமே கிடைத்தன. ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ரா வெள்ளி, ஹாக்கி வெண்கலம், துப்பாக்கி சுடுதலில் மனுபாகர், ஸ்வப்னில் கலப்பு இரட்டையரில் மனுபாகர் சரப்ஜோத் சிங், வெண்கலம் கைப்பற்றினர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிக்கான 400 மீட்டர் தொடர் ஒட்டம் நடந்தது. பெண்கள் பிரிவில் 8 அணிகள் 2 பிரிவுகளாக தகுதிச் சுற்றில் பங்கேற்றன. பி பிரிவில் களமிறங்கிய இந்திய அணியில் சுபா வெங்கடேஷன், ஜோதிகா ஸ்ரீ தண்டி, வித்யா ராம் ராஜ் பூவம்மா ராஜீ இடம் பெற்றிருந்தனர்.ஒட்டு மொத்தமாக 15 வது இடத்தை கைப்பற்றி பைனல் வாய்ப்பை இழந்தது.
ஆண்களுக்கான பிரிவில் 8 அணிகள் இரு பிரிவுகளாக தகுதிச்சுற்றில் விளையாடின. பி பிரிவில் விளையாடிய இந்திய அணியில் முகமது அஜ்மல் முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப் இடம் பிடித்திருந்தனர். பந்தய தூரத்தை 3 நிமிடம் 00.58 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்த இந்தியா, ஒட்டு மொத்தமாக 10 வது இடத்தை கைப்பற்றி பைனலுக்கு தகுதி பெறத்தவறியது
0
Leave a Reply