ஒலிம்பிக்கில் இந்தியா ஒளிரும்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி (ஜீலை 26 முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை) நடக்க உள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் 21, தடகளத்தில் 28பேர், உட்பட சுமார் 120 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 2021-ல் இந்தியா 7 பதக்கம் வென்றது. இம்முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் பெறும் இலக்கில் உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்களிடம் நேரடியாகாவும், வீடியோ கான்பரசிங் மூலமாகவும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஒலிம்பிக் என்பது கற்றுக் கொள்ளவதற்கான சிறந்த களம். உலகின் பெரும் விளையாட்டு திருவிழா என்பதால் கவனச் சிதறல் ஏற்படலாம். திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்படுத்துங்கள். உங்களது வாழ்க்கையின் வெற்றிப் பயணம் 140 கோடி மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று கூறினார்.
0
Leave a Reply