பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியரின் எதிர்பார்ப்பு
பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி வரும் 26-ல் துவங்குகிறது இதற்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் 11 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 29 பேர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் 16 பதக்கங்களை பெற போட்டியிட உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீது எதிர் பார்ப்பு அதிகம் உள்ளது.
100 மீட்டர் தடை ஒட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் ஜோதி. இவரது சிறந்த செயல்பாடு 12.67 வினாடி ஆக உள்ளது. 12.50 வினாடிக்குள் ஒடி வர பயிற்சியாளர் ஹில்லியர் கைகொடுத்து வருகிறார். ஜோதி, அரையிறுதிக்கு முன்னேறினால் சாதனைதான்.
சமீபத்தில் நடந்த பாரிஸ் டைமண்டு போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஒட்டத்தில் அவினாஷ் சபில் தேசிய சாதனை படைத்தார் 8.10 வினாடிக்கும் குறைவாக பைனலுக்கு முன்னேறலாம்.
பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ், 5000 மீட்டர் ஓட்டம் என இரு போட்டியில் பங்கேற்கிறார். பாருல் சவுத்ரி.
ஒலிம்பிக்கில் ஹைலைட் போட்டி ,ரிலே ஒட்டம் .இந்திய ஆண், பெண்கள் அணிகள் களமிறங்குகின்றன. இப்போட்டியில் இந்தியா அணி “கருப்பு குதிரை” என வர்ணிக்கப்படுகிறது. கடந்த உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆண்கள் அணி, கடும் சவால் தந்தது. இது இங்கும் தொடர்ந்தால் பைனலுக்கு செல்வது உறுதி.
தமிழகத்தின் பிரவின் சித்ரவேல் டிரிபிள் ஐம்ப், தஜிந்தர்பால் சிங் குண்டு எறிதல், உள்ளிட்டோர் தங்களது முந்தைய சாதனைகளை தகர்த்து, செயல்பட முயற்சிக்கலாம்.
0
Leave a Reply