பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி வெற்றி
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி, களமிறங்கின. இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு ''ரெஸ்ட்' கொடுக்கப்பட, வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு பெற்றார். மொத்தம் 4 'ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பவுலிங்' தேர்வு செய்தார். பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி வெற்றி
இந்தியா (50 over) 249/9
பேட்டிங்
ஸ்ரேயாஸ் 79(98), பாண்ட்யா 45(45)
அக்சர் 42(61)
பவுலிங்
ஹென்றி 5/42 (8 ஓவர்), ஜேமிசன் 1/31 (8 )
நியூசிலாந்து (45.3 over ) 205/10
பேட்டிங்
வில்லியம்சன் 81(120)
சான்ட்னர் 28(31)
யங் 22(35)
பவுலிங்
வருண் 5/42 (10 ஓவர்)l
குல்தீப் 2/56 (9.3 ஓவர்)
'டாஸ்'நியூசி., ('பவுலிங்' தேர்வு)
ரிசல்ட் இந்தியா வெற்றி (44 ரன்)
தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி (5 விக் கெட், 42 ரன், 10 ஓவர்) சாம்பியன்ஸ் டிரா பியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார்.
0
Leave a Reply