முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்தியா.
இந்தியா பொருளாதார ரீதியாக முழுமையாக வளர்ந்த நாடாக மாறுவதற்கு முன்பே, முதியோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக மாறக்கூடும் என ‘Transform Rural India’ ஆய்வு எச்சரித்துள்ளது.
2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 5 பேரில் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் எனவும், இது சுமார் 34.7 கோடி பேராக இருக்கலாம் எனவும் ஆய்வு கணித்துள்ளது. இவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு முதியோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்தியா குறைந்த மற்றும் நடுத்தர வருமான நிலையிலேயே வேகமான மக்கள்தொகை மாற்றத்தை எதிர்கொள்வதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
0
Leave a Reply