"வணக்கம் விருதுநகர்" என்ற குறைதீர்க்கும் சேவை எண்கள் அறிமுகம்- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், சேவைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து தீர்வு காணும் வகையில் "வணக்கம் விருதுநகர்" என்ற 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர்க்கும் சேவை எண் 97913-22979 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றவுள்ளனர். இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும்.
பொதுமக்களின் குறைகள் மீது விரைந்தும், திறம்படவும் செயலாற்ற அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரிவிக்கப்படும் புகார்கள் துறை வாரியாக பிரித்து அனுப்பப்படுவதோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே பொதுமக்களின் அடிப்படை வசதிகள், சேவைகள் தொடர்பான குறைகளை 97913-22979 என்ற தொலைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டும் அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவும் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply