25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மல்லிகை  உலகெங்கும் பரவலாக காணப்படுகிறது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்லிகை  உலகெங்கும் பரவலாக காணப்படுகிறது .

 மல்லிகை மணம், மனதை அமைதிப்படுத்தி அழுத்தத்தை குறைக்கிறது. அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினி பண்புகளை கொண்டுள்ளது. முடி அலங்காரத்தில் பயன்படுகிறது. வாசனை திரவியங்கள், அத்தியாவசிய எண்ணெய் தயாரிப்பில் உதவுகிறது. இந்திய கலாசார, அழகியல் ,பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில், 200க்கும் அதிக வகைகள் உள்ளன. 

முல்லை: தென் மாநிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது. வெண்மையான பூக்கள், அற்புத மணமுள்ளது. திருமண நிகழ்வுகளில் அதிகம் பயன்படுகிறது. மாலை அலங்காரம், வாசனைத் திரவியங்கள் தயாரிக்க உதவுகிறது.இது அரேபியன் ஜாஸ்மின் என்று ம் அழைக்கப்படுகிறது. பழந்தமிழரின் சங்க இலக்கிய நூல்களில் இந்த மலர் பற்றிய குறிப்புகள உள்ளன.

குண்டு மல்லி: பெரிய, அழகியவட்ட வடிவ பூக்களை உடையது குண்டு மல்லி தாவரம். வாசனைத் திரவியம் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.இந்தியாவில்தோட்டங்களில் வணிக  ரீதியாக வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் ராமநாதபுரம் குண்டு மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஜாதிமல்லி: இது, 'பொதுமல்லி' என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை நிற பூக்கள், மென்மையான மணம் உடையது. மருத்துவத்தில், குறிப்பாக மன அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. தோல் பராமரிப்பிலும் உபயோகப்படுகிறது.

புஷ்ப மல்லி: சிறிய, அடர்ந்த பூக்களைஉடையது. மணம், மற்ற வகைகளை விட தனித்துவமானது. தமிழக, கேரளா உட்பட தென் மாநிலங்களில் மணப்பெண் அலங்காரத்தில் பிரபலமாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News