25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


5 கோடி அமேசான் பங்குகளை விற்கும் Jeff Bezos.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

5 கோடி அமேசான் பங்குகளை விற்கும் Jeff Bezos.

Amazon நிறுவனர் ஜெஃப் பெசோஸ்(JeffBezos) அடுத்த ஆண்டில் நிறுவனத்தின்50 மில்லியன் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளார்.அவர் வைத்துள்ள அமேசான் பங்குகளின் மொத்த மதிப்பு $8.6 பில்லியன் ஆகும். இலங்கை பணமதிப்பில் ரூ. 2,68,391 கோடி ஆகும்.இப்போது அமேசான் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 171.8 டொலர்கள் (சுமார் ரூ.55770) ஆகும்.நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி., பங்கு விற்பனைக்கான திட்டம் கடந்த8ஆம் திகதி தொடங்கியது.அக்டோபர்டிசம்பர் காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறந்த விற்பனைக்குப் பிறகு அமேசான் பங்குகள்வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 8 சதவீதம் உயர்ந்தன.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமேசானின் ஆன்லைன் விற்பனை கடந்த காலாண்டில் மிகப்பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.அமேசான் பங்குகள் கடந்த ஆண்டில்80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, பெஞ்ச்மார்க் S&P 500 குறியீட்டை விட சிறப்பாக செயல்பட்டன.பெசோஸ் 1994இல் அமேசானை நிறுவினார். Bloomberg Billionaires Index-ன்படி, பெசோஸ் தற்போது 185 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் மூன்றாவது பணக்காரர் ஆவார்.

இதற்கிடையில், ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட்டும் கடந்த ஆண்டு அமேசானில் தனது 25 சதவீத பங்குகளை(6.53 கோடி பங்குகள்) விற்றார். அமேசானில் அவரது பங்கு1.9 சதவீதமாக சரிந்தது.ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் திருமணமான25 ஆண்டுகளுக்குப் பிறகு2019இல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அந்த நேரத்தில், மெக்கன்சி ஸ்காட் அமேசானில்4 சதவீத பங்குகளைப் பெற்றார், அதன் மதிப்பு36 பில்லியன் டொலர்கள்.அதன் மூலம் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் இணைந்தார். இருப்பினும்,2019 ஆம் ஆண்டில், அவர் தனது செல்வத்தில் பாதியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News