25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துவேம்பு ஜூஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துவேம்பு ஜூஸ்.

 பழங்காலத்திலிருந்தே, வேம்பு அதன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் காரணமாக பல்வேறு தொற்று நோய்களை குணப்படுத்தவும், எடையை குறைக்கவும் உதவுகிறது. வேம்பு இலையில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் உள்ளன. வேப்பஞ்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகி வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

வேப்ப இலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.

 வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேம்பு உதவுகிறது. எடை இழப்புக்கு அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் முக்கியமானது. வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு கலோரிகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

.தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை ஜூஸ் வடிவிலும் கொடுக்கலாம்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News