ஓபன் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.
ஓபன் பிரிவின் 6வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வலுவான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரின் மற்றும் அர்ஜுன் ஆகியோர் விளையாடினர். குகேஷ்–ஷம்சுதின், பிரக்ஞானந்தா–நாடிர்பெக் அப்துசட்டோரோவ் மற்றும் அர்ஜுன்–சிந்தரோவ் ஆகியோருக்கு இடையிலான மூன்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.
மற்றொரு ஆட்டத்தில் நிஹால் சரின், 54 நகர்த்தல்களில் யாக்குபோயிடம் தோல்வியடைந்தார். இதனால் இந்திய அணி 1.5-2.5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியடைந்து, தொடரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது.
0
Leave a Reply