"கிசான் ரின் போர்டல்"? அவசர கடனுதவிக்கு கிசான் லோன் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி.
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களையும், கடனுதவியையும் வழங்கி வருகிறது.பிஎம் கிசான்: தற்போது, பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் காத்து வருகிறதென்றே சொல்லலாம்.
விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது வரை 16 வது தவணையை வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளது
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு கடன் பெறுவதில் கடுமையான சிரமம் இருப்பதால், மத்திய அரசு கடந்த ஆண்டு கிசான் ரின் போர்ட்டலை அறிமுகம் செய்துள்ளது சீக்கிரமாக கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கிசான் ரின் போர்ட்டல், பல அரசுத் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமாகும். இது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதிச்சேவைகள், கடன் வழங்குதல், வட்டி மானியக் கோரிக்கைகள் மற்றும் பயன்பாடு பற்றிய விரிவான தரவுகளை வழங்கும். வணிகத் துறையில் முதலீடு செய்யவும், விவசாய உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இந்த வெப்சைட் மிகவும் உதவியாக இருக்கும். விவசாயிகள் கடன் தொடர்பான ஆலோசகர்களை, இந்த வெப்சைட் மூலமாக தொடர்புகொள்ளவும் முடியும்..
கிசான் கிரெடிட் கார்டு குறித்த பயன்பாடுகளை விவசாயிகள் நேரடியாக அறியலாம். கிசான் கிரெடிட் கார்டு (KCC) மூலம் கடன் பெற்ற விவசாயிகளும், தங்களுக்கு தேவையான தகவல்களை இந்த வெப்சைட்டில் அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் கிசான் ரின் போர்டல் மூலம் தொழில் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.கிசான் லோன் போர்ட்டல் மூலம் கிசான் கிரெடிட் கார்டுகளை எளிதாக பெறலாம். விவசாயிகளுக்கு வீடு வீடாக சென்று பதிவு செய்து கிசான் கிரெடிட் கார்டுகளையும் மத்திய அரசு வழங்கி வரும்நிலையில், கிசான் ரின் போர்ட்டல் மூலம் விவசாயிகள் எளிதாகவும், விரைவாகவும் விவசாய கடன்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த வெப்சைட்டின் பலன்கள் கிடைக்க வேண்டுமானால் ஆதார் கார்டு உதவியுடன் விவசாயிகள் ரிஜிஸ்டர் செய்தாலே, விவசாயிகளின் விவரங்கள் அனைத்தும் இந்த வெப்சைட்டில் அறிய முடியும். விவசாயிகள் மகிழ்ச்சி: இதற்கு முன் கடன் பெற விவசாயிகளின் விவரங்களை உள்ளிடுவதில் சிரமம் இருந்தது. ஆனால் இப்போது கிசான் லோன் போர்டல் மூலம் ஆன்லைன் கண்காணிப்பு செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் குறைந்த நேரத்தில் எளிதாக விவசாயக் கடன் பெற . "கிசான் ரின் போர்டல்" அவசர கடனுதவிக்கு கிசான் லோன் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
0
Leave a Reply