25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


குபேரசிவன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குபேரசிவன்

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கர்னாலி என்னும் இடத்திலுள்ள குன்றில் குபேர பந்தாரி கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர், அமாவாசை, திங்களன்று சுவாமியை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

நர்மதை நதிக்கரையிலுள்ள வனப்பகுதியில் ஒருநாள்  சிவனும், பார்வதியும் நடந்து சென்றனர். களைப்பால் பார்வதிக்கு பசி, தாகம் ஏற்பட்டது. இப்பகுதியில் பாயும் நர்மதை நதியானது, சிவன், பார்வதிக்கு மகளாக கருதப்படுகிறது. "நர்மதா... உன் தாயார் பார்வதி பசி, தாகமுடன் இருக்கிறாள். அவளுக்கு உதவி செய்" என்றார் சிவன். ஊற்றாக கிளம்பிய நர்மதை, உணவும் நீரும் அளித்தாள்.

சிறிது நேர ஓய்வுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் ராவணனின் தம்பியான அரக்கன் குபேரன் எதிர்ப்பட்டான். பார்வதியின் அழகைக் கண்ட அவன் ஆசை கொண்டான். அதன் எதிரொலியாக பார்வையை இழந்தான். பின்னர் தவறை உணர்ந்து சரணடைந்தான்.மனமிறங்கிய பார்வதி பார்வையை வழங்கினாள். அவனை வடக்கு திசையின் காவலனாகவும், செல்வத்தின் அதிபதியாகவும் ஆக்கினார் சிவபெருமான்.

குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவரது திருநாமம் குபேர் பந்தாரி சலவைக் கல்லால் ஆன சுவாமி முறுக்கு மீசை,தலைப்பாகை, மிரட்டும் விழிகளுடன் இருக்கிறார். நர்மதை நதியை படகில் கடந்த பின்னர் கோயிலை அடையலாம்.மகாசிவராத்திரியின் போது பெருமளவில் பக்தர்கள் கூடுவர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News