கடைசி வாய்ப்பில் தங்கம்! ஈட்டி எறிதலில் ரிங்கு அபார சாதனை!
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான எஃப்46 பிரிவு ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரிங்கு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
போட்டியின் கடைசி வாய்ப்பில் 65.11 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்த ரிங்கு, தங்கப் பதக்கத்தைத் தனதாக்கினார்.
இந்தியாவின் மற்றொரு வீரரான அஜீத் சிங் நான்காவது வாய்ப்பில் 65.02 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தோனேசியாவின் ரிஜால் 55.30 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
ஒரே போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களை வென்றது அணிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
0
Leave a Reply