ஜூடோவில் கோகிலாவுக்கு வெள்ளி; கபில் பார்மருக்கு வெண்கலம்!
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஜூடோ பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பெண்களுக்கான 52 கிலோ ஜே2 பிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை கோகிலா, அரையிறுதியில் சீனாவின் லியு இயை 2–1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் உலன் பெக்கை எதிர்கொண்ட கோகிலா, 0–1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான 70 கிலோ ஜே1 பிரிவில் இந்தியாவின் கபில் பார்மர் அரையிறுதியில் இந்தோனேசியாவின் ஜுனேடியிடம் 0–1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். பின்னர் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தோனேசியாவின் ராப்லி ர் அனாப்பை 1–0 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஜூடோவில் இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளது.
0
Leave a Reply