25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.

1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, 1950களில் திரையுலகில் அறிமுகமானார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தனது 15வது வயதில் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கே. பாலச்சந்தர் இயக்கிய ‘பாமா விஜயம்’ திரைப்படத்தில் அவர் ஏற்ற பார்வதி கதாபாத்திரம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமைந்தது. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்.

400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகியின் கலைப்பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சௌகார் ஜானகி பெற்ற முக்கிய விருதுகள்.

  • 1969 – கலைமாமணி விருது
  • 1970 – ‘இரு கோடுகள்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருது
  • 1985 – மகாநதி சாவித்ரி விருது
  • 1990 – எம்.ஜி.ஆர். விருது
  • 2004 – நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 2013 – SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 2020 – புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கலைமாமணி விருது
  • 2022 – பத்மஸ்ரீ விருது

சௌகார் ஜானகி (1931–2026) — தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் கலைஞர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News