விளையாட்டு செய்திகள் 21 st nov 2026
செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி!
ஹங்கேரியில் நடைபெற்று வரும் 'டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்' தொடரில், 21-வது இடத்துக்கான முதல் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் அபிமன்யு மிஷ்ராவை வீழ்த்தினார். மற்ற இந்திய வீராங்கனை வைஷாலி (23-வது இடம்), வீரர் அர்ஜுன் எரிகைசி (9-வது இடம்) ஆகியோர் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்தனர்.
ஸ்னூக்கர்: பங்கஜ் அத்வானி காலிறுதிக்கு முன்னேற்றம்!
இந்தூரில் நடைபெற்று வரும் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி 4-1 என்ற கணக்கில் சக வீரர் ராயான் ரஸ்மியை வீழ்த்தினார். இதையடுத்து காலிறுதியில் சக இந்திய வீரர் திக்விஜய் கடியானை எதிர்கொள்கிறார்.
மகளிர் பிரிமியர் லீக்: டெல்லி அணியின் இயக்குநராக ஜெயவர்தனே நியமனம்!
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான டெல்லி அணியின் இயக்குநராக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
0
Leave a Reply