தனிமை
மனிதர்கள் பிறந்ததிலிருந்து குழந்தை, மாணவன், இளைஞன், கணவன், மனைவி, தகப்பன், தாய், தாத்தா, பாட்டி, என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரைச் சார்ந்து அதாவதுபற்றுதலுடன் தங்களுடைய உள்ளுணர்வுகளைச் சொல்லிக் கொள்ளும் வாய்ப்பு கணவன் மனைவியிடையே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.கணவனுடைய தேவையை யார் அறிவார் மனைவி உருவில் உள்ள தெய்வமே அறியும் என்பது ஆண்களின் கருத்து, பெண்களுக்கு கணவன் தான் என்பதும் யாரும் வேண்டாம் நாம் இருவர் மாத்திரமே இருந்து கொள்ளலாம் என்று நிம்மதியாக இருக்கும் காலத்தில் காலனுடைய கட்டாயத்தில் யாராவது ஒருவரை பிரிய வேண்டிய நிர்பந்தத்தில் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிமை இவர்களை அதிகமாகவே ஏக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.
தனிமையின் கொடுமை அதை அனுபவித்தால்தான் தெரியும். உங்களுக்கென்ன எல்லாவற்றையும் துறந்து நிம்மதியாக இருக்கிறீர்கள். காலைக் கடன்களை முடித்து2 மணி நேரம் பூஜை செய்து, தனக்கு மட்டும் வேண்டிய ஆகாரத்தை செய்து கொண்டு10 மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்துவிடுகின்றனர். காலை பத்து மணியிலிருந்து இரவு 10 மணிவரை கிட்டத்தட்ட12 மணி நேரம் என்னதான் டி.வி. பார்ப்பது. சுலோகம் சொல்வது வீட்டை துடைப்பது. என்ற பல காரியங்கள் இருந்தாலும் இந்த நேரத்தை எப்படிக் கடத்துவது என்று பலர் அவதிப்படுகின்றனர்.தனிமை படுத்தப்பட்டவர்கள் இளம் வயதினராக இருந்தால் தனக்குப் பிடித்த தொழில், பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது என்று எத்தனையோ விதமான வேலைகளை ஏற்றுக் கொண்டு தனிமையை விரட்டலாம்.
வேலை செய்ய முடியாத அளவிற்கு வயோதிகம் அதிகரிக்க , அதிகரிக்கதனிமையில் மன நோய்க்கு ஆளாகி விடுகின்றனர். இப்படி பட்டவர்களுக்கு கொஞ்சம் சமூக சேவை எண்ணம் உள்ளவர்கள். ஏன் தாத்தாக்களைப் பார்த்து பேசுவது சிரிக்க, சிரிக்க அன்பான வார்த்தைகளைக் கூறுவது, பாசத்துடன் உடன் நலனை விசாரிப்பது,கால், கை, வலி என்றால்கை, கால் நீவி விடுவது தலைவலி என்றால் தலை வலித் தைலம் தேய்ப்பது என்ற சிறு சிறு வேலைகளை ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும். நாம் அவர்களுக்குச் செய்யும் சேவைகளால் அவர்கள் கூறும் வாழ்த்துக்கள் இருக்கின்றதே அவைகள் போதும். கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்க தினமும் செல்பவர்கள் வாரத்திற்கு5 நாட்கள் இச்சேவையை செய்ய பழகிக் கொள்ளுங்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பழமொழி இருக்கிறதே.இதை கவனிக்கும் இளைய தலைமுறையினர்5 வயதிலிருந்தே அவர்கள் ஒரு வீட்டிற்கு சென்றால் அங்கு தாத்தா, பாட்டி ரூமிற்கு சென்று பேசவேண்டும் என்ற கொள்கையை நாம் சொல்லாமலே அவர்கள் கடைபிடிப்பார்கள். யாராவது ஒரு தெருவில் இப்படி ஆரம்பித்து அதனுடைய பின் விளைவுகளை நம் பத்திரிக்கையில் பகிர்ந்து கொள்ளலாமே!.
0
Leave a Reply