இனிப்பு கடையை தொடங்கி இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகத்தை உருவாக்கிய LOVELY SWEET OWNER
அசோக் குமார் மிட்டல் , பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த புகழ்பெற்ற இனிப்பு கடைக்காரரின் மகன். அசோக் குமார் மிட்டலின் பால்தேவ் ராஜ் மிட்டல் 1961 ஆம் ஆண்டில் ஜலந்தரில் நண்பரிடம் இருந்து 500 ரூபாய் கடனாக பெற்று லவ்லி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஒரு இனிப்பு கடையை தொடங்கினார். அவரது மோட்டீச்சூர் லட்டு பஞ்சாப் முழுவதும் மிகப் பிரபலமானது. இதன் மூலம் இவரது இனிப்பு கடை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. 1969 ஆம் ஆண்டு ஜலந்தரிலேயே அவர் மூன்று இனிப்பு கடைகளை திறந்தார். தற்போது ஜலந்தரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இனிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. தந்தையின் வியாபார நுணுக்கங்களை கண்டு வளர்ந்த அசோக் குமார் மிட்டல் தற்போது பெரிய கல்வி குழுமத்தின் நிறுவனராக மாறி இருக்கிறார்.
சட்டப் படிப்பு மற்றும் டாக்டரேட் முடித்த அசோக் குமார் மிட்டல் 2005ஆம் ஆண்டில் தி லவ்லி ஃபுரொபஷனல் பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது இந்த பல்கலைக்கழகம், ஆண்டுக்கு 1153 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. 30,000க்கும் அதிகமான மாணவர்கள் இங்கே கல்வி பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி லவ்லி பல்கலைகழகம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரபலமான கல்லூரிகளோடு ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி, அதிகப்படியான வாய்ப்புகளை அளித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் செயல்படும் கல்வி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கல்வி குழுமத்தை நிறுவியதோடு நிற்காமல் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் அசோக் குமார் மிட்டல் உயர்ந்திருக்கிறார். ஆம்ஆத்மிகட்சிசார்பாகமாநிலங்களவைஉறுப்பினராகதற்போதுசெயல்பட்டுவருகிறார். 500 ரூபாய் கடனில் துவங்கிய ஸ்வீட் கடை, இன்று மாபெரும் பல்கலைக்கழகத்தின் அதிபதி.
0
Leave a Reply