25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மதுரைமல்லிகை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மதுரைமல்லிகை

மதுரைமல்லிகையின் மனமும், நிறமும், தமிழகத்தில்வேறு எங்கும் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில்கண்டறிய முடியாது. அதனால், உள்ளூர் சந்தைகள்முதல் உலக சந்தைகள் வரைமதுரை மல்லிகைக்கு நிரந்தரமாக வரவேற்பு உண்டு.பொதுவாகமல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி மாதம்தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள்அதிகளவு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும்.

குளிர்காலத்தில்மல்லிகைப்பூ செடிகளை கவாத்து செய்துஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய்மேலாண்மை செய்தால் நவம்பர் மற்றும் டிசம்பர்மாதங்களில் குளிர்காலங்களில் கூட மல்லிகைப்பூ உற்பத்தியைஅதிகரிக்கலாம்.குளிர்காலங்களில்மல்லிகை பூ விலையானது மும்மடங்குஅதிகரிப்பதால் விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டலாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில்தரையிலிருந்து 45 செ.மீ., உயரத்தில்கவாத்து செய்ய வேண்டும்.கவாத்துசெய்த வெட்டுப்பகுதிகளில் பைட்டலான் பூஞ்சாணக் கொல்லியை தடவி பூஞ்சாணத்தாக்குதலை கட்டுப்படுத்தலாம். கவாத்து செய்யும்போது குறுக்குக்கிளைகள், நோய் மற்றும் பூச்சிதாக்கிய கிளைகள், மெலிந்த சிறிய கிளைகள்ஆகிவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

செடிகளைநன்கு சூரிய ஒளி படுமாறுசெய்ய வேண்டும். கவாத்து செய்தவுடன் தொழுஉரம் 10 கிலோவுடன் 30;60;60 கிராம் தழை, மணி, சாம்பல்சத்து அதாவது, 65 கிராம், யூரியா 375 கிராம், பொட்டாஷ் 100 கிராம் என்ற அளவில்ஒவ்வொரு செடிகளுக்கும் அதன் மையப்பகுதிகளில் இருந்து 1 1/2 அடி அளவிற்கு தள்ளி 1/2 அடிஆழம்குழிபறித்துமண்ணில்இட்டுஉடனேதண்ணீர்பாய்ச்சவேண்டும்.ஒவ்வொரு செடிக்கு500 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இடுவதின் மூலம் நூற்புழுக்கள் தாக்கா வண்ணம் செய்யலாம். கவாத்து செய்து ஒரு மாதம் கழித்து10 மில்லி சைகோசெல் மற்றும்4 மி.லி ஹூமிக் அமிலத்தை10 லிட்டர் தண்ணிரில் கலந்து15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதை செய்தால் நவம்பர், டிசம்பரில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News