சைபர் செக்யூரிட்டி கேப்டனாக மம்முட்டி நியமனம் .
சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 'கிளிக்' என்ற திட்டத்தை கேரள அரசு முன்னெடுத்துள்ளது. இதன் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மம்முட்டியை, சைபர் செக்யூரிட்டி கேப்டனாக கேரள காவல்துறை நியமித்துள்ளது. இதுபற்றி பேசிய மம்முட்டி, "இணையம் என்பது அணு ஆயுதம் போன்றது. அதை நல்லதற்கும் பயன்படுத்தலாம், தீயதற்கும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குச் சும்மா ஸ்மார்ட்போன்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றார்.
0
Leave a Reply